Thursday 31 July 2014

விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் குருப் 'சி' பணி

விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள 39 குரூப் "சி" பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இன்ஜின் டிரைவர் முதல் நிலை (குரூப் சி): - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: முதல் நிலை இன்ஜின் டிரைவராக 225 இயங்கு திறன் கொண்ட படகில் 2 வருடங்களுக்கு குறையாமல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இன்ஜின் டிரைவர் இரண்டாம் நிலை (குரூப் சி)  - 02
சம்பளம்: மாதம் ரூ..5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
கல்வித் தகுதி: இரண்டாம் நிலை இன்ஜின் டிரைவராக 400 இயங்கு திறன் கொண்ட படகில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இன்ஜின் டிரைவர் மூன்றாம் நிலை (குருப் சி) - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
கல்வித் தகுதி: வணிக கப்பல் துறையில் மூன்றாம் நிலை டிரைவருக்கான அனுமதி பெற்றிருப்பதோடு கப்பலோட்டிகள் பொறியியல் அறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இன்ஜின் ரூம் மேஸ்திரி: (குருப் சி) - 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
கல்வித் தகுதி: இரண்டாம் நிலை பாய்லர் அட்டெண்டென்ட் சான்றிதழ்/ வணிக கப்பல் இன்ஜின் டிரைவர் சான்றிதழ் மற்றும் கீரிசர், பயர்மேன், அசிஸ்டென்ட்
பயர்மேனாக 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

IIAPல் பொறியாளர் மற்றும் ஜூனியர் ஆராய்ச்சி உதவியாளர் பணி

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் விண்வெளி பற்றிய ஆய்வு (IIAP) நிறுவனத்தில் காலியாக உள்ள 18 Engineer-B மற்றும் Jr. Research Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 18
1. Engineer-B - 01
2. Junior Research Assistant - 03
3. Mechanic-A - 02
4. Cook-A - 01
5. Junior Technical Assistant - 01
6. Upper Division Clerk - 01
7. Engineer-B - 01
8. Scientist-B - 01
9. Telescope Operator - 02
10. Junior System Administrator - 01
11. Upper Division Clerk - 02
12. Post Doctoral Fellow - 01
13. Junior Research Assistant - 02
கல்வித் தகுதி: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் BE அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும். பணி வாரியாக கல்வி தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ 15,600. 39.100 + 5400
விண்ணப்பிக்கும் முறை: www.iiap.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 08.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iiap.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இஸ்ரோவில் 233 உதவியாளர் பணி

இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) நிரப்பப்பட உள்ள 233 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 233
பணி: உதவியாளர்
மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Ahmedabad - 04
2. Bangalore - 75
3. Hyderabad - 24
4. New Delhi - 04
5. Sriharikota - 54
6. Thiruvananthapuram - 72
வயது வரம்பு: 07.08.2014 தேதியின்படி 18 - 26க்குள் இருக்க வேண்டும். SC,ST பிரிவினருக்கு 31க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 29க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கலை, சந்தையியல், மேலாண்மை, அறிவியல்,கணினி போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ 5,200. 20,200 + தர ஊதியம் ரூ. 2,400.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை 32034064593 என்ற கணக்கு எண்ணில் பாரத ஸ்டேட் வங்கியில் ரொக்கமாக செலுத்த வேண்டும். ((இஸ்ரோ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்லானை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும்)
பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுப்பணித்துறை பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் www.isro.gov.in என்ற இணையதளத்திலிருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Administrative Officer (ICRB),
ISRO Headquarters, Antariksh Bhavan,
New BEL Road, Bangalore 560094
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.08.2014
பிரிண்ட் அவுட் மற்றும் சான்றிதழ் நகல்கள் சென்று சேர கடைசி தேதி: 14.08.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 12.10.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு http://www.isac.gov.in/CentralOCB-2014/advt.jsp என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு (CTET) அறிவிப்பு

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசி்ரியர் பணியில் சேருவதற்கான தகுதி தேர்வு (CTET)செப்டம்பர் 2014 நடத்தப்பட உள்ளது. மத்திய பாடத்திட்ட அமைப்பான Central Board of Secondary Education இத்தேர்வை நடத்துகிறது.
மத்திய அரசு பள்ளிகள் தவிர தனியார் ஆங்கில வழி பள்ளிகளுக்கும் (CTET) தேர்வு பொருந்தும். CTET தேர்வு இரண்டு தாள்களை கொண்டதாகும்.
தாள்-I -ல் தகுதி பெறுபவர் 1 முதல் 5 வகுப்பிற்கான ஆசிரியர்களாக பணியாற்றும் வாய்ப்பை பெறலாம்.
தாள்-II -ல் தகுதி பெறுபவர்கள் 6 முதல் எட்டாம் வகுப்பிற்கான ஆசிரியர்களாக பணியாற்றும் வாய்ப்பை பெறலாம்.
1 முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்ற விரும்புபவர்கள் இருதாள்களிலும் தகுதி பெற வேண்டும்.
கல்வித்தகுதி: 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்க நிலை பிரிவிற்கான ஆசிரியர்களுக்கு, குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் + 2 தேர்ச்சியுடன் இரண்டு வருட ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

Wednesday 30 July 2014

செயில் நிறுவனத்தில் மருத்துவ அதிகாரி பணி

இந்தியா ஸ்டீல் அத்தாரிட்டி லிமிடெட்நிறுவனத்தின் (செயில்) ரூர்கேலா ஸ்டீல் தொழிற்சாலையில் காலியாக உள்ள 11 Medical Executive மற்றும் 29 Paramedical Staff பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 40
பணி: Medical Executive
1. Consultant/Specialist - 02
2. Sr. Medical Officer - 09
காலியிடங்களின் எண்ணிக்கை: 40
பணி: Para Medical Staff
1. Nursing Sister (Trainee) - 21
2. Nursing Brother (Trainee) - 08
கல்வித்தகுதி:
வயது வரம்பு:
Consultant பணிக்கு 40க்குள்ளும், Specialist பணிக்கு 38க்குள்ளும், Sr. Medical Officer பணிக்கு 35க்குள்ளும், Nursing Brother/Sister பணிக்கு 28க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
1. Medical Executives பணிக்கு  மருத்துவ துறையில் MBBS படிப்புடன் MS/MD/DNB சிறப்பு படிப்புடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Para Medical Staff பணிக்கு பிஎஸ்சி (நர்சிங்) முடித்து குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது +2 வில் அறிவியல் வகுப்பில் தேர்ச்சி பெற்று நர்சிங் துறையில் டிப்ளமோ முடித்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
1. Consultant ரூ. 36,600 -3% - ரூ. 62,000.
2. Specialist ரூ. 32,900 -3% - ரூ. 58,000.
3. Sr. Medical Officer  ரூ. 24,900 -3% - ரூ. 50,500.
4. Nursing Brother,Sister பணிக்கு மாதம் ரூ. 9,160 -3% - ரூ 13.150.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். Consultant/Specialist Doctors & Sr. Medical Officer பணிக்கு எழுத்துத் தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.sailcareers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.08.2014
மேலும் விண்ணப்பக்கட்டணம், தேர்வுகள் விவரம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sailcareers.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

கோவையில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க இளைஞர்களுக்கு வாய்ப்பு

கோவையில் வருகிற செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெறவுள்ள ராணுவ கல்வி படைப்பிரிவில் அவில்தார் கல்விப் பணி ஆள்சேர்ப்பு முகாமில் விருப்பமுள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோவையில் வருகிற செப்டம்பர் 4ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஆள்சேர்ப்பு முகாமில் 20 வயது பூர்த்திடைந்து 25 வயதுக்கு மிகாமல் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பட்டதாரி படிப்பு படித்துள்ள இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
இதற்கான எழுத்துத் தேர்வு கோவையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தில் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்களை வருகிற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதிக்குள் அனுப்ப கடைசி நாளாகும்.
இதுதொடர்பாக மேலும் விவரங்கள் பெற கோவையில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் (0422-2222022) தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கியில் பணி

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கியில் (TMB) காலியாக உள்ள Law Officer, SME, Industrial Finance, Retail Loans Officer & Agriculture Officer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி
பணி:
1. Law Officer
2. SME/ Industrial Finance/ Retail Loans Officer
3. Agriculture Officer
வயது வரம்பு: சட்டம் அதிகாரி பணிக்கு 35க்குள்ளும், வேளாண் அலுவலர் பணிக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின்  மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://career.tmb.in என்ற  அதிகாரபூர்வ இணையத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து அதனுடன் சுயசான்று செய்த தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைத்து அனுப்ப வேண்டும்
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager,
Human Resources Development Department,
Tamilnad Mercantile Bank Ltd, Head Office,
# 57, V. E. Road, Thoothukudi- 628002
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.08.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் சென்று சேர கடைசி தேதி: 12.08.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏழும் சந்தேகங்களுக்கு http://career.tmb.in/jobinfo.htm?job_num=LO1401 என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Tuesday 29 July 2014

NIFFTல் லோவர் டிவிஷனல் கிளார்க் பணி

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபவுண்டூரி ஃபோர்ஜ் டெக்னலாஜி National Institute of Foundry & Forge Technology (NIFFT)நிறுவனத்தில் காலியாக உள்ள  லோவல் டிவிஷனல் கிளார்க் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
பணி: லோவர் டிவிஷனல் கிளார்க்
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900
கல்வித் தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.08.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.niffit.ernet.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Monday 28 July 2014

ரெப்கோ வங்கியில் கிராஜூவேட் டிரெய்னி பணி

ரெப்கோ வங்கியின்கீழ் செயல்பட்டு வரும் Repco Home Finance (RHFL) நிறுவனத்தில் கிராஜூவேட் டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிராஜூவேட் டிரெய்னி
கல்வித்தகுதி: 10+2+3 என்ற முறையில் பி.காம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2014 தேதிப்படி 25-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.repcohome.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

முப்படைகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் இசைக் கலைஞர் பணி


மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடலோர காவல் படையில் நேவிக் (இசைக்கலைஞர்) பணிக்கு முப்படைகளிலிருந்து ஓய்வு பெற்ற இசைக்கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:  ஜேசிஓ, பேண்ட் மாஸ்டர் - 01
கல்வித் தகுதி: ராணுவம், கடற்படை, விமானப்படை போன்ற ஏதாவதொன்றில் ஜேசிஓ அல்லது அதற்கு சமமான தகுதியில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
பணி: நேவிக் (இசைக்கலைஞர்கள்) - 11
கல்வித் தகுதி: ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றிலிருந்து பெட்டி அதிகாரியாக அல்லது அதற்கு கீழ்நிலை அதிகாரியாக பணிபுரிந்திருக்க வேண்டும்.
பேண்ட் மாஸ்டர், இசைக்கலைஞர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சாக்ஸபோன், கிளாரினெட், எப் ஹாம், டிரெம்பெட், டேனர் டிராம்போன், இபி பாஸ், டிரம்மர், புளுட்,
பிக்கோலோ ஆகிய இசைக்கருவிகளை இசைக்க தெரிந்திருக்க வேண்டும்.
இந்தப் பணி ஏற்கனவே ராணுவம், கடற்படை, விமானப்படையில் பணிபுரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் மறு வேலைவாய்ப்பாகும். அவர்கள் கடைசியாக பணியாற்றிய தகுதியிலேயே மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Recruitment Officer,
Post Box No.127, A1, Sec24,
Noida (U.P.), PIN: 201301.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2014
மேலும் மாதிரி விண்ணப்பங்கள், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணி


மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (Central Industrial Security Force) காலியாக உள்ள 1,203 கான்ஸ்டபிள், ஒட்டுநர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப தகுதியான ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முன்னாள் ராணுவத்தினரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மொத்த காலியிடங்கள்: 1203.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. கான்ஸ்டபிள்/ டிரைவர் - 743 நிரப்பப்படாத நேரடி பணியிடங்கள்
2. கான்ஸ்டபிள்/ டிரைவர் - 308 முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3. கான்ஸ்டபிள்/ ஒட்டுநர்: - தற்போது ஏற்பட்டுள்ள நேரடி பணி நியமன இடங்கள் - 137
4. கான்ஸ்டபிள், ஒட்டுநர்: - தற்போது ஏற்பட்டுள்ள முன்னாள் ராணுவத்தினருக்கான பணியிடங்கள் - 15.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2 ஆயிரம்.
வயது வரம்பு: 19.07.2014 தேதியின்படி 21 - 27க்குள் வேண்டும். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு சட்டப்படியும் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கனரக மோட்டார் வாகனம் அல்லது போக்குவரத்து வாகனம், இலகுரக மோட்டார் வாகனம், கியர் உள்ள மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை ஓட்டுவதற்கான ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

மின்சார மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் அதிகாரி பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் மின்சார மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இயக்குநர் (நிர்வாகம்) குருப் 'ஏ' பணி
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600.

பணி: கோர்ட் மாஸ்டர் (ஆன்டிசிபேடட்) குருப் 'பி' பணி:
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.

பணி: பெர்சனல் அசிஸ்டென்ட் (குருப் 'பி' பணி)
காலியிடம்: 01 இடம்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

பணி: அசிஸ்டென்ட் (குருப் 'பி' பணி)
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

பணி: ஸ்டெனோகிராபர் (கிரேடு - டி குருப் 'சி')
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.

பணி: கன்சல்டன்ட்
காலியிடம்: 01 (ஒப்பந்த அடிப்படையிலானது).

மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, வயது வரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய  http://www.aptel.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தமிழக சுகாதாரத்துறையில் புள்ளிவிவர தொகுப்பு உதவியாளர் பணி

சென்னையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் காலியாக உள்ள புள்ளி விவர தொகுப்பு உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: புள்ளி விவர தொகுப்பு உதவியாளர்
காலியிடங்கள்: 34
பணியிடம்: ஒவ்வொரு மாவட்ட தலைமை இடத்திலும் ஒரு இடம் மற்றும் மாநில தலைமை இடத்தில் இருடங்கள்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 20-30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பி.எஸ்சி (கணினி அறிவியல்) பிசிஏ அல்லது கணினி பயன்பாடு குறித்த முதுகலை பட்டயம் அல்லது கணினி பயன்பாடு, தொழில்நுட்ப அறிவியல் குறித்த ஒரு வருட காலத்திற்கு குறையாத படிப்புச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் தட்டச்சு செய்வதில் திறமையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நல்ல புலமையும் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: புள்ளி விவரங்கள சேகரித்தல், தொகுத்தல் மற்றும் கணினியில் பதிவு செய்வதில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Sunday 27 July 2014

இந்தோ - திபெத்திய காவல் படையில் பணி

இந்தோ திபெத்திய காவல் படையில் காலியாக உள்ள 58 துணை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்று சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://itbpolice.nic.in/itbpwebsite/index.html  என்ற இணையதளத்தை பார்க்கவும்

+2 முடித்தவர்களுக்கு முப்படைகளில் அதிகாரி பணி


தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கப்பற்படை அகாடமி பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படைகளில் அதிகாரி அந்தஸ்து பணிகளில் சேருவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வு 28.9.2014 ஆம் தேதி நடத்த உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 375
காலியிடங்கள் விவரம்:
தேசிய பாதுகாப்பு அகாடமி - 320
ராணுவம் - 208
கப்பற்படை - 42
விமானப்படை - 70
இந்திய நேவல் அகாடமி - 55
வயது வரம்பு: 02.01.1996க்கு முன்போ அல்லது 01.01.1999க்கு பின்போ பிறந்திருக்கக் கூடாது. திருமணம் ஆகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதி: தேசிய பாதுகாப்பு அகாடமியின் ராணுவ பிரிவிற்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு அகாடமியின் விமானப்படை, கப்பற்படை பிரிவு மற்றும் கப்பற்படை அகாடமியின் 10 + 2 பிரிவிற்கு: இயற்பியல், கணிதம் கொண்ட பாடப்பிரிவில் +2 தேர்ச்சி. +2 தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

எல்லை பாதுகாப்பு படையில் துணை ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் பணி

எல்லை பாதுகாப்பு படை எனப்படும் Border Security Force (BSF)-ல் நிரப்பப்பட உள்ள 293 துணை ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 293
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Sub Inspector (Workshop) - 01
2. Sub Inspector (Master) - 10
3. Sub Inspector (Engine Driver) - 13
4. Head Constable (Master) - 68
5. Head Constable (Engine Driver) - 66
6. Head Constable  (Workshop) - 01
7. Constable (Crew) - 134
வயது வரம்பு:
1 துணை ஆய்வாளர் (மாஸ்டர் & இன்ஜின் ஒட்டுநர்) பணிக்கு 22 - 28க்குள் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் விரிவான விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, ஆவணங்கள் மற்றும் உடல் திறன், துறை தேர்வு மற்றும் நேர்காணல், மருத்துவ பரிசோதனைகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
1. துணை ஆய்வாளர் பணிக்கு மாதம் ரூ.9300. 34,800 + தர ஊதியம் ரூ.4200.
2. தலைமை காவலர் பணிக்கு மாதம் ரூ.5200. 20,200 + தர ஊதியம் ரூ.2400
3. கான்ஸ்டபிள் பிரிவு (Crew) பணிக்கு மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் இட ஒதுக்கீடு அல்லாத பிரிவினருக்கு ரூ.50. எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு கட்டணம் செலுத்தும் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: http://bsf.nic.in/doc/recruitment/r109.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அருகில் உள்ள BSF மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.08.2014
மேலும் விரிவான கல்வித்தகுதிகள் மற்றும் தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://bsf.nic.in/doc/recruitment/r109.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

அகில இந்திய வனொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர் பணி

புதுதில்லியில் செயல்பட்டும் வரும் AA India Radio நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழி பெயர்ப்பாளரக் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: News Reader-cum-Translator(Tamil)
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 21 - 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 23,000
கல்வித் தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட பட்டப்படிப்புடன் தமிழ் மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல் வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருப்பதும் விரும்பத்தக்கது. முதுகலை பட்டப்படிப்புடன் தமிழை ஒரு பாடமாக படித்திருப்பது விரும்பத்தக்கது.
பணித்தன்மை: ஆங்கிலத்திருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்யவும், தமிழில் செய்திகளை தெளிவாக வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

சட்டம் முடித்தவர்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பணி


புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசிய பசுமை தீர்ப்பாய முதன்மை பெஞ்சிலும், போபால், சென்னை, புனே, கொல்கத்தா ஆகிய 4 மண்டல பெஞ்சுகளிலும் காலியாக உள்ள 23 தனி செயலாளர், அசிஸ்டென்ட், இந்தி மொழி பெயர்ப்பாளர், ஸ்டெனோகிராபர் (கிரேடு - டி) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தேசிய பசுமை தீர்ப்பாயம்
காலியிடங்கள்: 23
பணி: தனி செயலாளர், அசிஸ்டென்ட், இந்தி மொழி பெயர்ப்பாளர், ஸ்டெனோகிராபர் (கிரேடு - டி)

பணி: தனி செயலாளர்
காலியிடங்கள்: 11
வயது வரம்பு: 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று நீதிமன்ற மாஸ்டர் பொறுப்பு வகித்திருக்க வேண்டும், மத்திய, மாநில அரசு, நீதிமன்றங்கள், டிரிபியூனல்களில் கிரேடு 'சி' பொறுப்பில் ரூ.4,600 (ரூ.9,300 - 34,800) சம்பளத்தில் ஸ்டெனோகிராபராக பொறுப்பு வகித்திருக்க வேண்டும்.
ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறனும், தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும். 6
மாத கம்ப்யூட்டர் பயிற்சி படிப்பு அவசியம். பி.எல் முடித்திருப்பது விரும்பத்தக்கது.

Saturday 26 July 2014

எல்.ஐ.சி.யில் 400 காப்பீட்டு முகவர் பணி

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்ட கிளையில் நிரப்பப்பட உள்ள 400 காப்பீட்டு முகவர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 400
பணி: காப்பீட்டு முகவர்
கல்வித்தகுதி: பள்ளி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17.07.2014 தேதியின்படி 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.maharojgar.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Friday 25 July 2014

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலங்களில் தனியார் வேலை வாய்ப்புப் பணியமர்த்தல் பிரிவு பணியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

மாநிலம் முழுதும் உள்ள 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நடத்தப்படும் தனியார் வேலை வாய்ப்பு பணியமர்த்தல் உதவிப் பிரிவுகளுக்கான பணியாளர் பதவிக்கு பின் வரும் தகுதியுடையோர்  சனிக்கிழமை மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொ) வி. வாசுதேவன் வெளியிட்ட தகவல்:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் மாநிலத்தின் 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும்  32 ( MIS ) பணியாளர்கள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால், வெளி முகமை (Outsourcing) முறையில் நியமிக்கப்பட உள்ளனர்.
கல்வித் தகுதி : MBA(HR) / MSW(HR),  MA(Personnel Management)-(நேரிடையாக முழுநேர கல்வி பயின்றவர்கள் மட்டும்.)
வயது வரம்பு : 24 வயது முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்கள்.
வேலைவிவரம்:  வேலை நாடுநர்களுக்கு தனியார் துறையில் பணியமர்த்தம் செய்வது, தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பது.
முன் அனுபவம்:  2 ஆண்டுகளுக்கு குறையாமல் மனிதவளத் துறையில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். 
மாத ஊதியம்- ரூ.20,000 (தொகுப்பூதியம்)
மேற்காணும் தகுதியுடையோர் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை எண்.42, ஆலந்தூர் ரோடு, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், கிண்டி, சென்னை. 600 032 -என்ற முகவரியில் அமைந்துள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு பதிவு அஞ்சல் மற்றும் ovemcl@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக (26.7.2014)  சனிக்கிழமை  மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்துக்குள் சென்று பார்வையிடலாம்.

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் Apprentice பயிற்சி

மும்பையில் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC)நிரப்பப்பட உள்ள 18 Trade Apprentice பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 18
பயிற்சி: Trade Apprentice
துறைவாரியான காலியிடங்கள்:
i.மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் - 08
2. ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் - 02
3. Medical Lab Technician - 04
4. X-Ray Technician: 02
5. Opthalmic Technician - 02
வயது வரம்பு: 18-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 1 வருடம்
உதவித்தொகை: பயிற்சியின் போது முதல் 2 பிரிவுக்கு மாதம் ரூ.2,530, மற்ற பிரிவுக்கு மாதம் ரூ.1970 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: 10, +2, டிப்ளமோ, Vocational course போன்றவற்றில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.barc.gov.in/careers/vacancy214.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து (சான்றிதழ் நகல்கள் அனைத்தும் சுய சான்று செய்திருத்தல் வேண்டும்)
கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Deputy Establishment Officer (R-V),
Bhabha Atomic Research Centre,
Trombay, Mumbai-400085.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.barc.gov.in/careers/vacancy214.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

இந்தியன் வங்கியில் 251 சிறப்பு அதிகாரி பணி

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 251 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 251
பணி: சிறப்பு அதிகாரிகள்
1. Assistant Manager (Industry)- 67
2. Manager (Specialized Verticals – Credit, Risk, HR & Marketing)- 90
3. Manager (Treasury/ Financial Products/ Financial Services)- 40
4. Manager (Planning & Economist)- 18
5. Manager (Security) - 11
6. Manager (Cost Accountant)- 02
7. Manager (Corporate Communications)- 02
8. Senior Manager (Treasury)- 04
9. Senior Manager (Risk Management)- 03
10. Chief Manager (Credit)- 10
11. Chief Manager (Economist)- 02
12. Chief Manager (Chartered Accountant)- 01
13. Chief Manager (Risk Management)- 01
வயது வரம்பு: 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.550 + 50 தபால் கட்டணம்) SC,ST,PWD பிரிவினருக்கு தபால் கட்டண் ரூ.50 மட்டும்.
விண்ணப்பிக்கும் முறை: வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2014
மேலும் பணிவாரியான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.indianbank.in/pdfs/rec/adv_spec_2014-15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ராணுவத்தில் பயர்மேன் மஸ்தூர் பணி


ராஜஸ்தானில் உள்ள ராணுவ வெடிமருந்து தலைமை அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள 41 பயர்மேன், மஸ்தூர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பயர்மேன் - 06
2. பயர்மேன் (பேக்லாக்)  - 02 (மாற்றுத்திறனாளிகள்)
கல்வித் தகுதி: இரு பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
உடற்தகுதிகள்: 165 செ.மீட்டர் உயரமும், விரிவடையாத நிலையில் மார்பளவு 81.5 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 86 செ.மீட்டரும், குறைந்தபட்சம் 50
கிலோ எடையும் கொண்டிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி: மஸ்தூர் - 30
பணி: மஸ்தூர் (பேக்லாக்) - 03
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதிம் ரூ.1,800.
வயது வரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 25.07.2014 தேதியின்படி பொதுப்பிரிவினருக்கு 18 - 25க்குள் இருக்க வேண்டும். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
OFFICER INCHARGE RECRUITMENT
CELL, 24, FIELD AMMUNITION DEPOT,
LALGARH JATTAN,
DISTT SRI GANGA NAGAR,
RAJASTHAN,
PINCODE: 335001.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.07.2014.
மேலும் மாதிரி விண்ணப்பம் மற்றும் முழுமையான விவரங்கள் அறிய www.indianarmy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday 24 July 2014

இந்திய கடலோர பாதுகாப்பு படையில் பணி

இந்திய கடலோர பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 11 Navik பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Indian coast guard
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. JCO/ Equivalent (Musician) Band Master - 01
2. Navik (Musicians) - 11
கல்வி தகுதி:
01. JCO பணிக்கு  சமமான ரேங்க் இராணுவம்,கடற்படை, விமானப்படை இருந்து ஓய்வு பெற்றவர்கள் அதற்கு சமமான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
02.Navik பணிக்கு இராணுவம், கடற்படை, விமானப்படை இருந்து ஓய்வுபெற்றவர்கள் அல்லது (சிறு அலுவலர் மற்றும் கீழே) அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2014
மேலும் விரிவான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய  www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

என்சிசி சான்றிதழ் பெற்ற பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் பயிற்சியுடன் பணி

என்சிசி சிறப்பு நுழைவு திட்டத்தின் மூலம் ஏப்ரல் 2015 ஷார்ட் சர்வீஸ் கமிஷனின் 37-வது கோர்ஸ்ஸில் சேர (SSC Non-Technical), NCC 'C' சான்றிதழ் பெற்ற திருமணம் ஆன, ஆகாத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: ஆண்கள் - 50, பெண்கள் - 04
வயது வரம்பு: 19 - 25க்குள் இருக்க வேண்டும். 02.01.1990க்கு முன் மற்றும் 01.01.1996க்கும் பின் பிறந்திருக்கக் கூடாது.
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். NCC சீனியர் டிவிஷனில் குறைந்தபட்சம் 2 வருடங்கள் பணியாற்றி NCC 'C' சான்றிதழுக்கான தேர்வில் 'B' Grade அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுத்தேர்வு, உளவியல் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து ஏ4 அளவு வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து பூர்த்தி செய்து பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கெஜட்டெட் அதிகாரியிடம் அட்டெஸ்ட் பெற்று தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அருகாமையில் உள்ள OC,NCC Unit-க்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.