Tuesday 21 May 2013

சவுதி அரேபியாவிலிருக்கும் இந்தியர்களுக்கு அவசர காலச் சான்றிதழ் வழங்கும் பணி


சவுதி அரேபியாவிலிருந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கு அவசர காலச் சான்றிதழ் வழங்கும் பணியை இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது.
சவுதியிலிருந்து, 60,000 இந்தியர்கள் தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ள நிலையில் இதன் முதல் கட்டமாக, 15,000 சான்றிதழ்களை மட்டும் சரிபார்த்து ஒப்புதல் தரும் பணியை இந்திய தூதரகம் மேற்கொள்கிறது.
அடுத்தகட்ட சரிபார்ப்புகள் குறித்த கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவில் அந்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, நிதாகத் என்ற பெயரில் புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி,
சவுதியில் உள்ள நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் ஒவ்வொரு 10 வெளிநாட்டு பணியாளர்களுக்கும் ஒரு சவுதி குடிமகன் என்ற வீதத்தில் பணியாளர் நியமனத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சட்டம் அமலாகியுள்ளதால், ஏராளமான இந்தியர்கள், தங்கள் வேலை பறிபோகும் என்ற அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக தாயகம் திரும்புவதற்காக, அவசர கால சான்றிதழ் கேட்டு தூதரகத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். சவுதி அரேபியாவில், 20,00,000 இந்தியர்கள் பணிபுரிகின்றனர். சவுதியில் பணிபுரிந்து வந்த 2,00,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பணியாளர்கள் கடந்த சில மாதங்களில் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

Want to get more details about this ; watch puthiathalaimurai news collections, puthiathalaimurai news collections 2013, puthiathalaimurai news for science and technology collections 2013, 

No comments:

Post a Comment